ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை
# ஃபெர்னாடோ ஸோரன்டினோ
# தமிழில் எம்.எஸ்
மிகச்சிறிய நூல் 11 சிறுகதைகள் மட்டுமே இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சில சிறுகதைகளா? என்ற கேள்வியும் வாசிப்பில் எழுகிறது. இதைப் புரிந்து கொள்ள வாசகனின் ஊகிக்கும் திறன் மிகவும் அவசியம் காரணம் கதைகளில் வரக்கூடிய ஆடு… கொசு... மனிதர்களின் மீவியல் சார்ந்த மனநிலை... இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள இயல்பான வாசிப்பு அனுபவம் மட்டும் போதுமானதாக அமைய வாய்ப்பு குறைவே. கதையில் வரும் சம்பவங்கள் விசித்திரமாக இருக்கின்றன என்றாலும் இதில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் மறைபொருளாகவே படைக்கப்பட்டுள்ளன என்பதைத் தேர்ந்த வாசகனால் எளிதில் அடையாளம் காண முடியும். அதிலிருந்து வாசகனின் கற்பனை மேலும் விரிந்து சிறுகதைகளை மேலும் ஒரு தளத்திற்குக் கொண்டு சென்று அதன் பரந்துபட்ட பரப்பை அவை சொல்லாத குறிப்பு உணர்வை வாசிக்கையில் அனுபவங்களாக நமக்கு ஏற்படுத்தி விட்டுச் செல்வதே இத் தொகுப்பின் சிறப்பு.
#அபி இராவணன்
No comments:
Post a Comment