அபி இராவணன்

Thursday, October 21, 2021

ராஜாஜியின் ஜெயில் டைரி

ராஜாஜியின் ஜெயில் டைரியில் ஒரு குறிப்பு...
ராஜாஜி ஜெயிலில் இருந்தபோது Rajaji's 1920 Jail Life" என்று ஆங்கிலத்தில் எழுதினார். அதை "சிறையில் தவம்" என்று தமிழில் திருகூடசுந்தரம் பிள்ளை, சின்ன அண்ணாமலை, தமிழ்ப்பண்ணை பதிப்பக வெளியீடாக மொழிபெயர்த்து வெளியிட்டார். கல்கி வார இதழில் சிறையில் தவம் என்ற நூலை அப்படியே வெளியிடாமல் "ராஜாஜியின் ஜெயிலில் டைரி" என்ற தலைப்பில் சில திருத்தங்கள் செய்தும் தேவையான இடங்களை மறு மொழியாக்கம் செய்தும் மூலநூலுடன் ஒப்பிட்டு பார்த்தும் வாரா வாரம் வெளியிட்டனர். 

ராஜாஜியின் ஜெயிலில் டைரி 1921 டிசம்பர் 21 முதல் 1922 மார்ச் 20 வரையிலான காலகட்டத்தில் தன் சிறை அனுபவத்தை டைரியில் குறிப்பாக எழுதினார். இங்குதான் எனக்கு ஒரு சந்தேகம்  நாட்டிற்காக சிறையில் அடைக்கப்பட்ட சிலர் அங்குதான் தங்கள் சிறை அனுபவத்தை எழுதுகின்றனர். சுயசரிதை எழுதுகின்றனர். கடிதங்கள் நூலாக தொகுக்கப் படுமலவிற்கு எழுதிக் குவித்திருக்கின்றனர்.

காந்தி - சத்திய சோதனை, ராஜாஜி - ஜெயில் டைரி, 
நேரு - இந்திராவிற்கு கடிதங்கள், 
அரவிந்தர் - எனது சிறைவாசம். பெரியார் - சிறையில் இருந்த போது எழுதியவைகள் இவர்களுக்கு எல்லோருக்கும் சிறையில் சில சலுகைகள் கிடைத்தன எழுதுவதற்கு அவற்றை வெளியிலிருப்பவர்களுக்கு அனுப்புவதற்கும்.
இவர்கள் எழுதிய நூலில் இவர்களே கூறியுள்ளார். சிறை சந்தோஷமாகவே இருந்தது...
ராஜாஜி - ராஜாஜியின் ஜெயிலில் டைரி பக். 1 "வெனக்கு வெரும் கடுங்காவல் தண்டனையே..."

அரவிந்தர்  - எனது சிறைவாசம் பக். 3 "...ஆக மொத்தத்தில் சிறைவாச காலம் சந்தோஷமாகவே கழிந்தது..."

ஆனால் வ.உ.சி அவர்கள் மட்டும் சிறையில் செக்கிழுத்து அடிபட்டு நோய்வாய்ப்பட்டு இறந்தார் ஏன்...?

சரி அது போகட்டும் ராஜாஜியின் டைரி குறிப்பில் 1922 ஜனவரி 24 ஒரு குறிப்பை கண்டேன்... நீங்களே படித்து பாருங்கள் சிறையில் என்னவெல்லாம் செய்து இருக்கிறார் என்று...கடிதம் எழுதுதல், சுந்தரகாண்டம் படித்தல், டைரி எழுதுதல்.

No comments:

Post a Comment