மு.சந்திரகுமார்
2ஆம் பதிப்பு 2018
தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற உந்துதலால் லாக்கப் நாவலை
வாங்கிய அடி உதையால் வலி தாங்காமல் சுருண்டு கிடந்தோம். அப்படியான ஒரு அனுபவம் இந்த வாசிப்பில் கிடைத்தது. இச் சூழலில் எப்படிப்பட்ட ஓர் உணர்வு தோன்றுமோ அப்படி இருந்தது. அன்று எனக்கு. ஒரு நாளுமில்லாத அளவிற்கு இரவு நீண்டு போனது. வாங்கிய அடி உதைகள் கொஞ்சம் நஞ்சமில்லை. அவ்வளவும் மனதில் ஏற்படுத்திய பாதிப்புகளை எளிதில் கடந்து போக முடியாது. உண்மையில் லாக்கப்
அப்படியானது தான். சிறையின் அனுபவம் பற்றிய குறிப்பாக இந்த நாவலைக் கடந்து போக முடியவில்லை. வெளியுலகிற்கு இன்னமும் இதுபோல ஆயிரம் கதைகள் சொல்லப்படாமல் மிக இரகசியமாக உள்ளன. மனிதர்கள் ஏன் தவறு செய்கிறார்கள்? சமுதாயம் சொல்லும் ஒழுக்கம் உண்மையில் யாருக்கும் மட்டும் சொல்லப்படுகிறது. காவல் நிலயத்தின் தேவை அல்லது அவசியம் என்ன? மனித உரிமைகள் மீறல்கள் குறித்துப் பேசும் அருமையான நாவல். சகித்துக் கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்களை இந்நாலில் நீங்கள் வாசிக்கையில் கடந்து போவீர்கள். மூத்திரவாடையும் வியர்வை பிசுபிசுப்பும் பீீீடி புகையுமாக....
ஆந்திராவில் குண்டூரில் வாலாஜா பேட்டை காவல் நிலையத்தில் அப்பாவி நால்வர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் கதை. அப்பாவி தமிழர்கள் அரைகுறை தெலுங்கில் பேசி எதையும் புரியவைக்க முடியாமல் செய்யாத தவறுக்காக அவர்கள் பட்ட துயரம் சொல்லி அடங்காது. உறவுகள் யாருமற்ற அனாதையாக வாழும் இவர்கள் வாழ வழியில்லாமல் ஊரைவிட்டு ஓடிப்போனவர்கள் இவர்கள்.
கடவுள் யாரையும் கை விடுவதில்லை என்று இவர்கள் நால்வரிடம் சென்று கூறினால் சிரித்துக் கொண்டே உங்களைப் பைத்தியம் என்று நினைப்பார்கள். வாழ்க்கையில் உண்மையான அனுபவமே கடவுள். அப்படியான அனுபவம் பெற்ற ஒருவன் இந்த நாவலைக் கடந்து பின்னர் உணர்வான். சிறைச்சாலை நமக்கு வேறு உலகத்தையும் வேறு அனுபவத்தையும் கொடுக்கும். எப்படியான மனநிலையில் ஆசிரியர் இதை எழுதும் போது இருந்ததிருக்க வேண்டும்.
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அனேகமாக இவர்கள் தான் என்று எண்ணத் தோன்றும் படியாக இருக்கிறது.
வாழ்க்கையை வாழ எப்படியெல்லாம் போராட வேண்டி இருக்கிறது அப்பாவி மனிதர்களால். வாழ்வின் எல்லா பக்கங்களிலும் துன்பத்தை வாசித்தவன் அனேகமாக இந்த லாக்கப்பில் இருந்தவனக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
மனதைக் கிழித்துக் கொண்டு வெளியேறும் உணர்வுகளைப் பெரும்பாலும் இந்த பக்கத்தில் நீங்கள் காணலாம். ஐயோ... அம்மா... அப்பா சார் வலிக்குது எனக்கு எதுவும் தெரியாது. என்ற வார்த்தைகள் நம்மைச் சுற்றி இருக்கும் சுதந்திரத்தை,போலித் தனத்தையும் வாழ்வின் மீதான அவநம்பிக்கை தோல் உரித்து காட்டிவிடும். நாவல் விசாரணையில் தொடங்கி, ஒரு சமூகத்தின் மீது காட்டமாக விசாரணையை நிகழ்த்த வேண்டும் என்ற மனுவோடு நிற்கிறது.
சாதாரண எளிய மக்களின் பக்கம் நின்று பேச ஒரு வாய்ப்பும் இல்லாத சூழலில் இருப்பவர்களுக்கு எழுத்தைத்
தவிர உண்மையான ஆறுதலை யாராலும் கூற முடியாது. எழுத்து மட்டும் தான் எளிய மக்களுக்கு இருக்கின்ற ஓரே நம்பிக்கை என்பதை இந்நாவல் உணர்த்துகிறது. வேறு வழியே இல்லை. அதிகாரம் அழுத்தி நசுக்கி வாழ வழி இல்லாத நிலையில் நம்மை கொண்டு நிறுத்தும் போது எழுத்து ஒன்றுதான் நம்மைக் காக்கும் ஆயுதம்.
மனித உரிமை மீறல்கள் தொடர்கதையாக ஒரு பக்கம் நிகழ, அதைச் சகித்துக் கொள்ள முடியாமல் போராட்டங்களும் இம்மாதிரியான படைப்புகளும் தோன்றுவது காலத்தின் கட்டாயம்.
நாவலை வாசித்து முடித்ததும் பாவம் அவர்கள் என்று சொல்லிவிட்டு மூடி வைத்தேன். வேறு எந்த ஒரு எண்ண ஓட்டங்களும் இன்றி சில மணி நேரம் அதைப் பற்றி மட்டுமே யோசித்துக்
கொண்டிருந்தேன். லாக்கப்
No comments:
Post a Comment