Showing posts with label #காதுகள். Show all posts
Showing posts with label #காதுகள். Show all posts

Thursday, May 21, 2020

"காதுகள்" எம்.வி.வெங்கட்ராம்


எம்.வி.வெங்கட்ராம்

பேய்கள் வாழும் நாவலா? இல்லை தேவதையா? இறைவனா? எதுவோ? 

காதுகள் 

நாவல்...

இது ஒரு வகையான சராசரி நாவல் என்று சொல்லிவிட முடியாது. இது ஒரு தன்வரலாறு நாவல் என்றும் 
மேஜிக்கல் ரியலிச 
நாவல் என்றும் கூறுவர். 
ஆனால் இயல்பான நாவல் எழுதும் தன்மையைக் கடந்தது என்பது மட்டும் உண்மை. காரணம் மகாலிங்கம் இந்நாவலில் மையப் புள்ளி அவனது காதுகளில் கேட்கும் வினோத சத்தம், உரையாடல், மனக்குழப்பம் என என்னவோ எல்லாம் அவனை ஒரு வழி செய்கிறது... எம்.வி.வெ யின் இலக்கிய நடை, அவரின் மனம் எல்லாம் விசித்திரமானதே. இந்த வாழ்க்கை அவருக்குக் கொடுத்த எல்லாமும் இந்த நாவலில் பதிவாகியுள்ளது. என்னமோ இப்படி எழுதி அவர் சென்றது ஆச்சரியம் ஆனால் இதுவே உண்மை. நமக்கும் இந்த மன ரீதியான அனுபவங்கள் உண்டு என்றாலும் நாம் அதைக் கவனித்தோமா இல்லை பதிவு செய்தோமா என்றால் இல்லை என்பதே விடை...

இந்நாவல் 1992 வெளிவந்தாலும் இதன் மொழிநடை வார்த்தைகள் இன்றும் புதிய எழுத்தாகவே உள்ளது. வாசிப்பில் நமக்குப் பைத்தியம் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்பதே என் கருத்து. இதில் இலக்கிய கிண்டல், காந்திய விமர்சனம், அரசியல், அவரின் கால இலக்கி சூழல், உரையாடல் என அனைத்தையும் ஒருவித மொழியில் கற்பனை கலந்த மாயையை எழுதி செல்கிறார். வாசிப்பில் சலிப்பு இல்லை... ஒரே விஷயத்தை இத்தனை விவரணைகளுடன் எழுதிச் செல்வது ஒரு கலை...

#அபி இராவணன்

பட்டாம் பூச்சியின் சுதந்திரம்

*பட்டாம்பூச்சி முழுவதும் வாசித்து முடித்தேன்... மிகச் சிறந்த நாவல் என்று சொல்லலாம். 855 பக்கங்கள். மயிர்க்கூச்செறிய வைக்கும் மாபெரும் மானி...