"வணக்கம் துயரமே"
💕💕💕💕💕💕💕💕
#பிரெஞ்சில்💙
--------------------------------------------------
#தமிழில் ❤️
நாகரத்தினம் கிருஷ்ணா✍️
~~~~~~~~~~~~~~~~~~~~~
மொழிபெயர்ப்பு நாவல்களைத் தொடர்ந்து வாசித்து வரும் நான் இப்பொழுது எடுத்திருப்பது பிரெஞ்சு மொழி நாவல். வாசிப்பின் நிறைவிலான மனநிலையிலிருந்து இப்போது இதை எழுதுகிறேன். நாவலின் சுருக்கத்தோடு இந்நாவலைப் பற்றிய என் கருத்தை இங்குப் பதிவு செய்கிறேன். மனித மனம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி அதனால் ஏற்படும் விளைவு களைவுகளின் மூலமாக நாம் கொடுக்கும் விலையைக் (பிரெஞ்சு கலாச்சாரத்தோடு இணைத்து) கதைக் களமாகக் கொண்டு இந்நாவல் பின்னப்பட்டுள்ளது.
இந்நாவலை எழுதிய பிரான்சுவாஸ் சகன்
பிரெஞ்சில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எழுத்தாளர்களில் ஒருவர். மேலும், தீவிரமான பெண்ணியவாதிகூட.
பிரெஞ்சு சமூகத்தில் ஆண், பெண் உறவு, ஆண், பெண் சமம் என்னும் புரிதல். பெண்ணுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை இவையெல்லாம் சில சமயங்களில் அவர்களையே சுய பரிசோதனை செய்து கொள்ளத் தூண்டுகிறது. காரணம் தன்னிச்சையாகச் செயல்படும் உரிமை. எதையும் தனியே செய்ய முடியும் என்ற மனநிலை இவற்றினூடே மனித மனம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி அவற்றால் ஏற்படும் விளைவாக்கல் வாழ்வை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பது பற்றிய கதையாக அமைகிறது.
பிரெஞ்சு சமூகத்தில் ஓர் ஆண் தன் வாழ்வில் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முடியும். அந்த வகையில் ஒருவன் தன் வயதுக்கு ஒத்த மற்றும் தன் வயதுக்கு மிகக் குறைந்த இரண்டு பெண்களைக் காதலித்துக் கொண்டு தன் மகளுடன் மகிழ்ச்சியாக இருந்த காலங்களில் இவர்களுக்கு இடையிலான வாழ்வின் மன போராட்டங்களை எதார்த்தத்தை "செசில் " என் கதாபாத்திரத்தின் மூலம் உணர்ச்சிப்பூர்வமாக இக்கதை எழுதப்பட்டுள்ளது.
கதையில் வரும் "செசில் " ரெமோனின் மகள். ரெமோன் எப்பொழுதும் காதல் வயப்பட்டுக் கொண்டே இருப்பவன். நிலையான மனம் இவனிடத்தில் இல்லை. அவனுக்கு பெண்கள் மீது எப்போதும் காதலும் காகமும் குறைந்ததே இல்லை. வயதானாலும் தன்னை எப்பொழுதும் வலிமை உள்ள ஒரு இளம் வாலிபன் போலவே காட்டிக் கொண்டான்.
இவளின் முட்டாள்தனமான உணர்ச்சிகளின் செயல்பாட்டால் ஆன்னீ வாகன விபத்தில் இறந்து போனாள். அது செசிலை வெகுவாக பாதித்தது. அவள் வாழ்ந்த சூழல். அப்பாவைச் சுற்றிப் பல பெண்கள் இப்படியான ஒரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த அவள் காதல், காமம் இது மட்டுமே வாழ்வில் போதும் இன்பம் மட்டுமே போதும் என்று எண்ணியவளாய் இருந்தாள். அவளது அப்பாவை போலவே வாழத் தொடங்கினாள். எனினும் மனித மனம் சில நேரங்களில் தான் செய்த தவறுகளை எண்ணி மன்னிப்பு கேட்கும் அப்படியான பல தருணங்களை வாழ்வில் சந்தித்த போதும் மீண்டும் மீண்டும் தன் பழைய வாழ்க்கையையே அவர்கள் வாழத் தொடங்கினார்கள். அதுவே அவர்களால் முடிந்தது இதுவே எதார்த்தம். நடந்ததைத் தூக்கிப் போட்டுவிட்டு இனி நடக்கவிருக்கும் செயல்களை நோக்கி எப்பொழுதும் போல மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு வாழ முயல்வோம் எனத் தந்தையும் மகளும் வாழ்வைத் தொடர்ந்தனர். மீண்டும் புதிய உறவுகள்...
ஏன் இப்படியான ஒரு படைப்பு அவசியமா என்று வினா எழுப்பினால் மிக மிக அவசியம் என்பேன். காரணம் இந்நாவலை வாசிக்கும் போது வாசகனின் மனநிலை வேறு பக்கம் பயணத்தைத் தொடங்கி இருக்கும். அதுதான் இப் புனைவின் வெற்றி. வாசகனுக்கு இப்படியான ஓர் அனுபவத்தைக் கொடுப்பதன் மூலமாக நாளைய வாழ்வில் அவன் அடையப்போகும் அனுபவத்தை அவனே தீர்மானிக்கிறான். செசில் என்னும் கதாபாத்திரம் மூலம் மிகுந்த மன உளவியல் சிக்கலை முன்வைக்கிறது. அவள் அதில் சிக்கிப் படும் அவஸ்தை வாசகனைக் கதையில் கரைத்து விடுகிறது.
நாவலை ஒரே மூச்சில் வாசிக்கும் படியான சூழல் எனக்கு அமையவில்லை. எனினும் வாசிப்பில் மொழியின் நடை மிகவும் முக்கியம். அந்த வகையில் சரளமான தொருமொழி நடையில் மனித மனத்தின் உளவியல் சிக்கலைப் பேசும் நாவலை இவ்வளவு அழகாகத் தமிழில் கொண்டு வந்திருப்பது அற்புதமே அந்த வகையில் மொழிபெயர்ப்பாளரை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
#அபி இராவணன்
No comments:
Post a Comment